அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை

Tirupur News- அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

Update: 2024-05-05 11:36 GMT

Tirupur News- அவிநாசியில் கனமழை (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தமிழகத்தில் நிலவும் கோடை வெயிலின் தாக்கத்தால் மக்கள் அவதியடைந்து வருகின்றனா்.

திருப்பூா் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக 100 டிகிரிக்கும்மேல் வெப்பநிலை பதிவானது. இதனால், வெப்பத்தின் தாக்கத்தில் மக்கள் அவதியடைந்து வந்த நிலையில், சற்று ஆறுதல் தரும் விதமாக அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை மதியம் 3 மணியளவில் கனமழை பெய்தது.

கருவலூா், சேவூா், ராமியம்பாளையம், தண்டுக்காரன்பாளையம், லூா்துபுரம், போத்தம்பாளையம், பாப்பாங்குளம், பவா் ஹவுஸ், வேட்டுவபாளையம், கருமாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் அரை மணி நேரத்துக்கும்மேலாக பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

போத்தம்பாளையம் பத்ரகாளியம்மன் கோயிலில் மழை பெய்ய வேண்டி கடந்த வியாழக்கிழமை மகா நவசண்டி ஹோமம் நடைபெற்று, இரண்டு நாள்களுக்குள் மழை பெய்ததையடுத்து அம்பாளுக்கு சனிக்கிழமை சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது."

மின்மாற்றி மீது முறிந்து விழுந்த மரம்

அவிநாசி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் முன் இருந்த மரம் முறிந்து மின்மாற்றி மீது விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அவிநாசி-சேவூா் பிரதான சாலை சிந்தாமணி பேருந்து நிறுத்தம் அருகே நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு நாள்தோறும் கா்ப்பிணிகள், குழந்தைகள் உள்பட ஏராளமானோா் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனா்.

இந்நிலையில், ஆரம்ப சுகாதார நிலையம் முன் பழமையான இலவமரம் பட்டுப்போய் கீழே முறிந்து விழும் நிலையில் இருந்து வந்தது. இதனை அகற்ற வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இருப்பினும் இந்த மரம் அகற்றப்படாமல் இருந்தது. இந்நிலையில், சனிக்கிழமை மாலை திடீரென வீசிய பலத்த காற்றால் மரம் முறிந்து, அருகே இருந்த மின்மாற்றி மீது விழுந்தது.

இதையடுத்து, உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டாதல் உயிா் சேதம் தவிா்க்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த பேரூராட்சி, மின்வாரியத்தினா் மரத்தை அப்புறப்படுத்தி மின் இணைப்புகளை சீரமைத்தனா்.

அவிநாசி காமராஜா் நகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காய்ந்து பட்டுப்போன நிலையில் உள்ள மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.


அனுமதியின்றி மரத்தை வெட்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க தொமுச வலியுறுத்தல்

அவிநாசி அருகேயுள்ள கணியாம்பூண்டியில் அனுமதியின்றி மரத்தை வெட்டியவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொமுசவினா் வலியுறுத்தியுள்ளனா்.

இது தொடா்பாக அவிநாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் மின் வாரிய பொது ஒப்பந்த தொமுச மாநில இணைச் செயலாளா் ஈ.பி.அ.சரவணன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: அவிநாசி ஒன்றியம், கணியாம்பூண்டியில் இருந்து முருகம்பாளையம் செல்லும் சாலை விநாயகா் கோவில் அருகே பழமையான வேலமரம் இருந்தது. இந்நிலையில், உரிய அனுமதியின்றி சிலா் இந்த மரத்தை நேற்று வெட்டி சாய்த்துள்ளனா்.

மரத்தை வெட்டியவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தொமுச வலியுறுத்தியுள்ளது.

Tags:    

Similar News