அவினாசி ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா

அவிநாசியில் உள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலில், அனுமர் ஜெயந்தி விழா நடந்தது.;

Update: 2022-01-04 11:00 GMT

ஆஞ்சனேயர் ஜெயந்தியை ஒட்டி, நெருப்பு பந்து சுழற்றுதல் மற்றும் களரி ஆகிய வீர விளையாட்டுகளும் கோவில் வளாகத்தில் நடைபெற்றன. 

திருப்பூர் மாவட்டம், அவினாசியில் உள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. 1ம் தேதி காலை, மூலமந்திர ஹோமம், ஆராதனையுடன் விழா துவங்கியது. அன்று மாலை, 6:30 மணிக்கு, சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன், வில்லிபாரத சொற்பொழிவு நிகழ்த்தினார்.

நேற்று, அதிகாலை வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, சுந்தரகாண்ட அனுமன் சிறப்பு சொற்பொழிவும், அன்னதானமும் நடைபெற்றது. மாலை, கோத்தகிரி, தத்வன சைதன்யா சுவாமி ஜி குழுவினரின் பக்தி பஜனை நடைபெற்றது.

பிறகு, வாள் வீச்சு, நெருப்பு பந்து சுழற்றுதல் மற்றும் களரி ஆகிய வீர விளையாட்டுகளும் இடம் பெற்றன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை, ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் பக்த பேரவையினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News