அவினாசியில் நிலக்கடலை சீசன் முடிவுற்றது

அவினாசி சுற்றுவட்டார பகுதிகளில், நிலக்கடலை சீசன் முடிவுக்கு வந்தது.

Update: 2021-12-08 05:15 GMT

பைல் படம் 

திருப்பூர் மாவட்டம், அவினாசி, சேவூர், ஈரோடு மாவட்டம் கோபி, நம்பியூர், அந்தியூர், பெருந்துறை, புளியம்பட்டி உள்ளிட்ட பல இடங்களில், நிலக்கடலை சாகுபடியில் பெருமளவு விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆண்டு தோறும், செப்டம்பர் மாதம் துவங்கி, நவம்பர் மாதம் வரை நிலக்கடலை அறுவடை நடக்கும். அதன்படி, நடப்பாண்டு அறுவடை சீசன் தற்போது முடிந்துள்ளது. விளையும் நிலக்கடலை,

சேவூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் நடக்கும் ஏலத்தில் விற்கப்படும். தற்போது, விளைச்சல் முற்றிலும் குறைந்தது. கடந்த வாரங்களில் இருப்பு வைத்திருந்த நிலக்கடலையை ஏலத்துக்கு எடுத்து வந்த விவசாயிகள் எண்ணிக்கையும் குறைந்தது. இதனால், இந்த வாரம் நடந்த ஏலத்தில், 180 மூட்டை நிலக்கடலை மட்டுமே வரத்தாக இருந்தது. 5 லட்சம் ரூபாய்க்கு மட்டுமே வர்த்தகம் நடந்தது.

Tags:    

Similar News