அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முப்பெரும் விழா
Tirupur News,Tirupur News Today- அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று முப்பெரும் விழா நடைபெற்றது.
Tirupur News,Tirupur News Today- அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலகப் புகைப்பட தினம், ஆசிரியர்கள் தினம் மற்றும் முதலாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் ‘சக்திவேல் குரூப்ஸ்’ நிறுவன இயக்குனர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
விழாவின் தொடக்கமாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ஜோ நளதம் வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினரான பங்கேற்ற சக்திவேல் பேசுகையில், தொழில் முனைவோர் ஆவதற்கான வழிமுறைகளையும் , முன்னேறுவதற்கான நெறிகளையும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
கௌரவ விருந்தினராக ரோட்டரியை சார்ந்த பாலசுப்பிரமணியம் விழாவில் கலந்துக்கொண்டு பேசுகையில், ஒரு வணிக நிறுவனம் தன்னை சரியான முறையில் விளம்பரப்படுத்தி அடையாளம் செய்வதன் அவசியம் குறித்தும் ஒரு தொழிலின் வணிக அடையாளம் (Branding) எவ்வளவு முக்கியத்துவம் என்பதனை பற்றியும் எவ்வாறு தனது வணிக அடையாளத்தின் தனித்துவத்தை நிலை நிறுத்துவது என்பதை பற்றியும் மாணவர்களுக்கு விளக்கிக் கூறினார்.
விழாவின் இறுதியாக சர்வதேச வணிகவியல் தலைவர் பாலமுருகன் நன்றி கூறினார், இவ்விழாவில் சர்வதேச வணிகவியல் துறை சார்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.