திருப்பூர் மாவட்ட தேவாலயங்களில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை

திருப்பூர் மாவட்டத்தில், அவினாசி பகுதி தேவாலயங்களில் புனித வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.

Update: 2022-04-16 00:00 GMT

அவினாசி தேவாலயத்தில், புனிதவெள்ளியை முன்னிட்டு நடந்த சிறப்பு பிரார்த்தனை

கிறிஸ்தவர்கள் வணங்கும் ஏசு கிறிஸ்து, சிலுவையில் அறையுண்டு, மரித்த நாளை நினைவு கூறும் வகையில், நேற்று புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டது.  கிறிஸ்தவர்கள், கடந்த, 40 நாட்களாக அனுசரித்த தவக்காலத்தின், முக்கியமான நாளாக, இது கருதப்படுகிறது. நேற்று, காலை முதல் சர்ச்களில் வழிபாடு, ஆராதனை நடத்தப்பட்டது.

ஏசுவின் சிலுவைப்பாடுகள் மூலம், உணர வேண்டிய வாழ்க்கை தத்துவம் குறித்து, பைபிளில் உள்ள கருத்தை மையமாக வைத்து, பாதிரியார்கள், நற்செய்தியாளர்கள் போதித்தனர். பக்தர்கள், காலை முதல் உணவருந்தாமல், உபவாசத்துடன் வழிபாடுகளில் பங்கேற்றனர். மாலை, 3:00 மணிக்கு சர்ச்களில், சிலுவை பாதை ஆராதனை நடத்தப்பட்டது.

அவினாசி புனித தோமையார் தேவலாயம், சேவூர் லுார்துபுரம் புனித லுார்து அன்னை தேவாலயம், பல்லடம், தாராபுரம், உடுமலைப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள கத்தோலிக்க, சி.எஸ்.ஐ., தேவாலயங்களில், புனித வெள்ளி வழிபாடு நடத்தப்பட்டது. நாளை ஈஸ்டர் பெருநாள் கொண்டாடப்படுகிறது.

Tags:    

Similar News