ஊற்றெடுக்கும் கிணற்றுநீர்: மோட்டார் மூலம் வெளியேற்றம்

அவினாசி அருகே, கிணற்றில் நிரம்பி வழிந்த தண்ணீர், மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டது.

Update: 2021-12-04 12:45 GMT

அவிநாசி தத்தனூர் ஊராட்சி, ஆத்திக்காடு  பகுதியில் நிரம்பி வழிந்த கிணற்று நீர் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், அவினாசி ஊராட்சி ஒன்றியம் தத்தனுார் பகுதியில், சில நாட்களுக்கு முன், வரலாறு காணாத மழை பெய்தது. மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, அங்குள்ள நெசவாளர்களின் வீடுகளில் உள்ள தறிக்குழிக்குள் தண்ணீர் ஊற்றெடுத்து.

ஆத்திக்காடு பகுதியில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த கிணற்றில் ஊற்றெடுத்த தண்ணீரால், கிணற்றில் தண்ணீர், நிரம்பி வழிந்து கொண்டே இருக்கிறது. இந்த கிணற்றில் தடுப்புச்சுவரும் பலமிழந்துள்ள நிலையில், விபரீதம் ஏற்படுவதை தவிர்க்க, கிணற்றில் உள்ள தண்ணீரை, தத்தனுார் ஊராட்சி தலைவர் விஜயகுமார் மேற்பார்வையில், ஊழியர்கள் மோட்டார் மூலம் வெளியேற்றினர்.

Tags:    

Similar News