அவினாசியில் முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்தநாள் விழா
மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவையொட்டி அவரது படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது;
அவினாசி சுற்றுவட்டார பகுதியில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவையொட்டி அவரது படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது.
அவினாசி நகர அ.தி.மு.க., சார்பில், புதிய பேருந்து நிறுத்தம் பகுதியில் நடந்த நிகழ்ச்சிக்கு, நகர செயலாளர் ராமசாமி தலைமை வகித்தார். கட்சி கொடியேற்றப்பட்டு, ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது. நகர துணை செயலாளர் மூர்த்தி, நகர இளைஞரணி செயலாளர் ஜெயபால் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கார்த்திக் ராஜா, இளம் பெண்கள் பாசறை செயலாளர் பூபதி ராஜா, தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் கார்த்திக், ராஜசேகர், முஸ்தபா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நகரில் உள்ள, 18 வார்டுகளிலும் கட்சி கொடியேற்றப்பட்டது.