அன்னூர் வட்டாரத்திற்கு 10 டன் உரம் ஒதுக்கீடு

அவினாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, அன்னுாருக்கு, 10 டன் டி.ஏ.பி., உரம் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.;

Update: 2022-04-25 10:00 GMT

திருப்பூர் மாவட்டம் அன்னுார் வட்டாரத்தில் உள்ள உரக்கடைகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில், வட்டார வேளாண் அலுவலர் சுகன்யா, தனி வட்டாட்சியர் (குடிமைப்பொருள்) தோட்டக்கலை உதவி இயக்குனர் மதுபாலா, தோட்டக்கலை அலுவலர் புனித வேணி ஆகியோர் கொண்ட குழு நேற்று முன்தினம் கள ஆய்வு செய்தது.

உரங்களை கூடுதல் விலைக்கு விற்பது, பதுக்குவது, உரக்கடத்தல் மற்றும் வேளாண் அல்லாத பிற பயன்பாட்டுக்கு பயன்படுத்துதல் ஆகிய சட்டத்துக்குப் புறம்பான செயல்களை தடுக்கும் பொருட்டும், விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் உரங்கள் கிடைக்கவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.ஆய்வின்போது அமோனியம் சல்பேட், பொட்டாஸ் மற்றும் கலப்பு உரங்கள் போதிய இருப்பு உள்ளது எனவும், டி.ஏ.பி., உரம் மட்டும் இருப்பு இல்லை என, கண்டறியப்பட்டது.

இதையடுத்து மொத்த விற்பனையாளர்களிடம் இருந்து 10 டன் டி.ஏ.பி., உரம் உடனடியாக அன்னுார் வட்டாரத்துக்கு வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.உரங்களை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்தல், தேவையற்ற உரங்களை விவசாயிகள் வாங்கும்படி கட்டாயப்படுத்துதல் ஆகிய சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டால், அந்த உரக்கடைகளில் விற்பனை தடை செய்யப்படும். உரிமம் ரத்து செய்யப்படும்' என, வேளாண் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News