அவினாசியில் நிரம்பி ததும்பும் குட்டை பார்வைக்கு ரம்மியம்

கடந்து சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் அவினாசி அருகேயுள்ள பனங்குட்டை இன்று நிரம்பி வழிந்தது.

Update: 2021-11-12 06:30 GMT

அவினாசி, முறியாண்டம்பாளையம் பகுதியில் நிரம்பி ததும்பும் குட்டை.

திருப்பூர் மாவட்டம், அவினாசி முறியாண்டம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட இடத்தில் குட்டை உள்ளது. கடந்த, 3 ஆண்டுக்கு முன், நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கம் சார்பில், 1.10 லட்சம் ரூபாய் செலவில், துார்வாரி சுத்தம் செய்யப்பட்டது. கடந்த, 2020ம் ஆண்டு ஜூலை மாதம் பெய்த மழையில், இக்குட்டை நிரம்பியது. அதன்பிறகு ஏற்பட்ட வறட்சியால் நீர் நிரம்பவில்லை.

கடந்த சில நாட்களாக, சுற்றுவட்டார பகுதிகளில் பெய்யும் மழையால், நீர்வழித்தடங்களில் வழிந்தோடி வரும் தண்ணீர் இக்குட்டையில் சேகரமாகிறது. இதன் மூலம், நிரம்பி ததும்பி, ரம்மியமாக காட்சியளிக்கிறது. இதன்மூலம், சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News