அவினாசியில் போலி மருத்துவர் கைது; மருத்துவமனைக்கு சீல்
அவினாசியில், போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி கைக்காட்டி புதுாரில், சுதா என்பவர், கே.எஸ்., கிளினிக் என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வருகிறார். இங்கு, புதுக்கோட்டை மாவட்டம், சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார், 45. என்பவர் டாக்டராக பணிபுரிந்து வந்தார்.
இவர் போலி மருத்துவர் என, புகார் கிளம்பியதையடுத்து, அவிநாசி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சக்தி தங்கராஜ், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சக்திவேல், சுகாதார ஆய்வாளர்கள் ரமேஷ், பரமன் உள்ளிட்டோர் மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஜெயக்குமார், போலி மருத்துவர் என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து, அவினாசி வட்டாட்சியர் ராகவி முன்னிலையில், கிளினிக் 'சீல்' வைக்கப்பட்டது. மருத்துவமனையை ஒட்டியிருந்து ஆய்வககூடமும், 'சீல்' வைக்கப்பட்டது. சுகாதாரத்துறையினர் கொடுத்த புகாரின் போரில், ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.