நிலக்கடலையில் கூடுதல் மகசூல் விவசாயிகளுக்கு 'டிப்ஸ்'
உணவு தானிய பயிர் மற்றும் எண்ணெய் வித்து பயிர் விளைச்சலை அதிகரிக்க, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை ஊக்குவிப்பு வழங்கி வருகிறது.;
திருப்பூர் மாவட்டத்தில், பிரதான எண்ணெய் வித்து பயிர்களான நிலக்கடலை மற்றும் எள் சாகுபடி செய்யப்படுகிறது. அவிநாசி வட்டாரத்தில், மானாவாரி பயிராக, 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. சாகுபடி பரப்பு அதிகரிக்கவும், விளைச்சலை பெருக்கவும் விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.
பொங்கலுார் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் கதிரவன், தேசிய உணவு பாதுகாப்புத்திட்ட மாவட்ட ஆலோசர் அரசப்பன், தேசிய உணவு பாதகாப்பு திட்ட தொழில்நுட்ப உதவியாளர் கிருத்திகா, அவிநாசி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அருள்வடிவு, அவிநாசி வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் மஞ்சு உள்ளிட்ட பலர் பேசினர்.
ஈரோடு, குமரகுரு வேளாண் கல்லூரி மாணவியர், நிலக்கடலை பயிரில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறை குறித்து, வரைபடம் மூலம் விளக்கினர். ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.