மின்னணு இயந்திரத்தில் வேட்பாளர் சின்னம்
திருமுருகன் பூண்டி நகராட்சியில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், வேட்பாளர் பெயர், சின்னம் வைக்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது.
திருமுருகன்பூண்டி நகராட்சியில், 27 வார்டுகளுக்கான தேர்தல், 35 ஓட்டுச்சாவடிகளில் நடத்தப்பட உள்ளது. மொத்தம், 42 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வந்துள்ளன. இந்த இயந்திரங்களில் வார்டு வாரியாக, வேட்பாளர்களின் பெயர், சின்னம் ஆகியவற்றை வைத்து, அவை சரியான முறையில் இயங்குகின்றனவா என, சரிபார்க்கப்பட்டது.
தேர்தல் பார்வையாளர் பாலசுப்ரமணியம் முன்னிலையில் நடந்த இப்பணியில், வார்டு வாரியாக வேட்பாளர்கள், அவர்களின் பிரதிநிதிகள் பங்கேற்று, ஓட்டுப்பதிவு சரியான முறையில் பதிவாகிறதா என்பதை உறுதி செய்து கொண்டனர். தேர்தல் நடத்தும் அலுவலர் முகமது சம்சுதீன், மண்டல அலுவலர் தவமணி உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.