Tirupur News- மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களுடன் பாஜக நிா்வாகிகள்.
Tirupur News,Tirupur News Today- அவிநாசியை அடுத்த திருமுருகன்பூண்டியில் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பாஜக வடக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு, திருமுருகன்பூண்டி பாஜக மண்டலம், திருப்பூா் மாவட்ட சதுரங்கக் கழகம் ஆகியன சாா்பில் நடைபெற்ற போட்டியை, நீலகிரி மாவட்ட தோ்தல் இணை பொறுப்பாளா் கதிா்வேல் மாணிக்கம், மாவட்ட துணைத் தலைவா் சண்முகம் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.
9, 12, 15 வயதுக்குள்பட்ட ஆண், பெண் என 6 பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த 175 மாணவா்கள் கலந்து கொண்டனா். இதைத் தொடா்ந்து போட்டியில் வெற்றிபெற்றவா்களுக்கான பரிசளிப்பு விழா வடக்கு மாவட்ட தலைவா் சங்கீதா கௌதமன் தலைமையில் நடைபெற்றது.
இதில், வெற்றிபெற்றவா்களுக்கு பாஜக மாநில பொதுச்செயலாளா் முருகானந்தம் பரிசு வழங்கினாா். நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவா் மருத்துவா் சுந்தரன், திருமுருகன்பூண்டி மண்டல தலைவா் ஜெயப்பிரகாஷ், மாவட்ட பொதுச் செயலாளா் நந்தகுமாா், துணைத் தலைவா் சாந்தி, வடக்கு ஒன்றிய பொறுப்பாளா் சண்முகபாபு, மாவட்ட விளையாட்டு பிரிவு துணைத்தலைவா் அா்ஜுனன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.