ரூ.1 கோடியில் வளர்ச்சிப்பணி துவக்கி வைத்த எம்.பி.
அவினாசி ஊராட்சி ஒன்றிய பகுதியில், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சிப்பணிகளை, நீலகிரி எம்.பி., ஆ.ராசா துவக்கி வைத்தார்.
அவினாசி ஊராட்சி ஒன்றிய பகுதியில், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சிப்பணிகளை, நீலகிரி எம்பி ஆ.ராசா துவக்கி வைத்தார்.
பாரத பிரதமர் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், அவிநாசி, புதுப்பாளையம் ஊராட்சியில், கவுண்டம்பாளையம் முதல், வளையபாளையம் வரை, 48.15 லட்சம் ரூபாய் மதிப்பிலான சாலை பராமரிக்கும் பணி, அவிநாசி வஞ்சிப்பாளையம் முதல், கவுண்டம்பாளையம் வரை, 35.90 லட்சம் ரூபாயில் சாலை பராமரிப்பு பணியை துவக்கி வைத்தார். தெக்கலுாரில் 14 லட்சம் ரூபாய் மதிப்பில், உணவு தானியக்கிடங்கு கட்டும் பணி, தெக்கலுார், சென்னிமலையபாளையத்தில், 9 லட்சம் ரூபாயில், அங்கன்வாடி மையம் கட்டும் பணி என, மொத்தம், 1.07 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், புதுப்பாளையம் ஊராட்சி தலைவர் கஸ்துாரிபிரியா, தெக்கலுார் ஊராட்சி தலைவர் மரகதமணி, தி.மு.க., மாவட்ட செயலாளர் பத்மநாபன், ஒன்றிய செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.