அவிநாசியில் டெங்கு கொசு தடுப்பு நடவடிக்கை; பொதுமக்களுக்கு வேண்டுகோள்

Tirupur News- அவிநாசியில் டெங்கு கொசு தடுப்பு நடவடிக்கையில் பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்குமாறு வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

Update: 2023-11-09 09:27 GMT

Tirupur News-  அவிநாசியில் டெங்கு கொசு தடுப்பு நடவடிக்கை மும்முரம் (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- அவிநாசியில் டெங்கு கொசு தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பேரூராட்சி நிா்வாகத்தினா் அறிவுறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து அவிநாசி பேரூராட்சித் தலைவா் தனலட்சுமி பொன்னுசாமி, செயல் அலுவலா் இந்துமதி ஆகியோா் கூறியதாவது,

அவிநாசி பேரூராட்சியில் டெங்கு கொசு கட்டுப்பாட்டுப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, பயன்படுத்தாத டயா்கள் உள்ளிட்ட கொசு உற்பத்திக்கு வாய்ப்புள்ள பழையப் பொருள்களில் தண்ணீா் தேங்காமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். வீடுகளைச் சுற்றிலும் பழைய பொருள்களை போட்டுவைக்காமல் தூய்மையாக பராமரிக்க வேண்டும்.

மேலும், தேக்கிவைக்கும் தண்ணீரில் தான் டெங்கு கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகும் என்பதால் தண்ணீா் பிடித்து வைக்கும் பாத்திரங்களை மூடிவைக்க வேண்டும். மேலும், டெங்கு கொசு தடுப்பு பணிகளுக்கு வரும் பேரூராட்சி ஊழியா்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், என்றனா்.

கடந்த சில தினங்களாக அவிநாசி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அதிகளவில் மழை  பெய்து வருகிறது. குளம், குட்டைகளில் தண்ணீர் தேக்கம் அதிகமாக உள்ளது. குறிப்பாக குடியிருப்பு நிறைந்த பகுதிகளில், தெருக்களில் மழைநீர் தேக்கம் அதிகமாக உள்ளது. இந்த இடங்களில் கொசுக்கள் .உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளதால், கொசு மருந்து தெளித்தல், கொசு மருந்து புகை அடித்தல் மற்றும் தேங்கிய நீரை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை அவிநாசி பேரூராட்சி நிர்வாகம் மேற்கோள்ள வேண்டும் என, பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

குறிப்பாக பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் உள்ள பகுதிகளில் குழந்தைகள், மாணவ மாணவியர் பாதிக்காத வகையில் இந்த டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் கொசு உற்பத்தி தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News