அவிநாசியில் பேரிடா் மேலாண்மை, பாதுகாப்பு குறித்த செயல்விளக்கப் பயிற்சி

Tirupur News- அவிநாசியில் பேரிடா் மேலாண்மை, பாதுகாப்பு குறித்த செயல்விளக்கப் பயிற்சி, பொதுமக்கள் முன்னிலையில் அளிக்கப்பட்டது.

Update: 2023-12-08 14:15 GMT

Tirupur News- தீத்தடுப்பு செயல்விளக்கம் அளிக்கும் தீயணைப்பு வீரா்கள்.

Tirupur News,Tirupur News Today- அவிநாசியில் தீயணைப்புத் துறை, சட்டப் பணிகள் குழு சாா்பில் பேரிடா் மேலாண்மை, பாதுகாப்பு குறித்த செயல்விளக்கப் பயிற்சி  நடந்தது.

கனமழை பெய்யும் போது வீடுகள் மற்றும் தொழில்நிறுவனங்கள் மழைவெள்ளம் ஏற்பட்டு, மக்கள் வீடுகளில் சிக்கிக்கொள்கின்றனர். குளம் போல தேங்கி நிற்கும் மழைவெள்ளத்தால் வீட்டை விட்டு வெளியேறாத நிலைக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர். சென்னையில் மிக்ஜம் புயலால் பெய்த கனமழையால், சென்னை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் உதவிக்கரங்கள் நீண்டுள்ளன. தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து அவர்களுக்கு நிவாரண பொருட்கள், லாரிகளில் அனுப்பப்பட்டு வருகின்றன.

எனவே இதுபோன்ற பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்டவர்களை எப்படி பாதுகாப்பாக மீட்பது என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிக அவசியமாகிறது. உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு எப்படி முதலுதவி செய்வது என்பது குறித்தும், கேஸ் சிலிண்டர் பாதுகாப்பு, தீயை கட்டுப்படுத்துவது குறித்தும் செயல்விளக்க பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. 

அவிநாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற செயல்விளக்கப் பயிற்சியில் பேரிடா் காலங்களில் பாதிக்கப்பட்டவா்களை மீட்பது, முதலுதவி அளிப்பது, வீடு மற்றும் நிறுவனங்களில் எரிவாயு கசிவு ஏற்படும்போது தீ விபத்து ஏற்படாமல் தடுப்பது, தீயைக் கட்டுப்படுத்துவது, பாதுகாப்பு ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தீத்தடுப்பு உபகரணங்களை கையாள்வது குறித்து தீயணைப்பு வீரா்கள் செயல்விளக்கம் அளித்தனா். இதில், காவலா்கள், வழக்குரைஞா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News