திருப்பூர் மாவட்டத்தில் பருத்தி விலை ஏறுமுகம்

திருப்பூர் மாவட்டத்தில் விளைவிக்கப்படும் பருத்தி விலை, தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Update: 2021-11-25 14:45 GMT

பைல் படம்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி, ஈரோடு உள்ளிட்ட பிற மாவட்டங்களில் விளைவிக்கப்படும் பருத்தி, அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பிரதி வாரம், ஏலம் விடப்படுகிறது. இந்த வாரம் நடந்த ஏலத்தில், 42 டன் பருத்தி ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இதில், ஆர்.சி.எச்., ரகம், குவின்டாலுக்கு, 7,800 முதல், 8,869 ரூபாய் என விற்கப்பட்டது. டி.சி.எச்., ரகம், 9,000 முதல், 10,906 ரூபாய் வரை விற்கப்பட்டது. கொட்டு ரகம், 2,000 முதல், 3,500 ரூபாய் வரை விற்கப்பட்டது. ஏலத்தில், 399 விவசாயிகள், 12 வியாபாரிகள் பங்கேற்றனர். மொத்தம், 27.80 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

Tags:    

Similar News