துாள் பறக்க துவங்குது பருத்தி ஏலம்

திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் பருத்தி சீசன் களை கட்ட துவங்கியுள்ளது.;

Update: 2021-12-17 16:30 GMT

பைல் படம்.

திருப்பூர் மாவட்டம் அவினாசி, கருவலுார், கோவை மாவட்டத்தின் அன்னுார், ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை, கோபி போன்ற இடங்களில் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர். தற்போது பருத்தி அறுவடை சீசன் துவங்கியுள்ளது. அறுவடை செய்யப்படும் பருத்தி, அவினாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மூலம் வாரந்தோறும் நடக்கும் ஏலத்தில் விற்கப்படுகிறது. அதன்படி, இந்த வாரம் நடந்த ஏலத்தில், 68 டன் பருத்தி ஏலத்துக்கு வந்தது. 51 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. 509 விவசாயிகள் பங்கேற்றனர். வரும் நாட்களில் விவசாயிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News