அவினாசி பருத்தி ஏலத்தில் வரத்து அதிகரிப்பு: ரூ.71 லட்சத்துக்கு ஏலம்

அவினாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடந்த ஏலத்தில், வரத்து அதிகரித்திருக்கிறது.

Update: 2022-01-13 04:45 GMT

திருப்பூர் மாவட்டம், அவினாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில், வரத்து அதிகரித்திருக்கிறது. இந்த வார ஏலத்தில், 79 டன் பருத்தி வரத்தாக இருந்தது.

ஆர்.சி.எச். ரகம் ஒரு குவிண்டாலுக்கு, 8,000 முதல், 10,268 ரூபாய், டி.சி.எச் ரகம், 10 ஆயிரம் முதல், 13,600 ரூபாய், கொட்டு ரகம், 2,500 முதல், 5,000 ரூபாய் வரை விலை போனது. 511 விவசாயிகள், 15 வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர். மொத்தம், 71 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

Tags:    

Similar News