அவினாசியில் பருத்தி ஏலம்: ரூ.47 லட்சம் வர்த்தகம்
அவினாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நடந்தது.;
அவினாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நடந்தது. மொத்தம், 1,503 மூட்டையில், 47 டன் பருத்தி வரத்தாக இருந்தது. ஆர்.சி.எச்., ரகம், குவிண்டாலுக்கு, 8,000 முதல், 10,950 ரூபாய், டி.சி.எச்., ரகம், 10,000 – 12,106 ரூபாய், கொட்டு ரகம், 2,500–5,600 ரூபாய் வரை வரை விற்கப்பட்டது. மொத்தம், 47 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. 318 விவசாயிகள், 10 வியாபாரிகள் பங்கேற்றனர்.