அவினாசி பருத்தி ஏலம்: ரூ.47 லட்சம் வர்த்தகம்
அவினாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடந்த பருத்தி ஏலத்தில் ரூ.47 லட்சம் வர்த்தகம் நடைபெற்றது;
திருப்பூர் மாவட்டம், அவினாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்திற்கு மொத்தம், 43 டன் பருத்தி ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டது.
இதில், ஆர்.சி.எச்., ரகம், குவின்டாலுக்கு, 10 ஆயிரம் முதல், 12 ஆயிரத்து 269 ரூபாய், டி.சி.எச்., ரகம், 11 ஆயிரம் முதல், 12 ஆயிரத்து 300 ரூபாய், கொட்டு ரகம், 3,500 முதல், 6,000 ரூபாய் வரை ஏலம் போனது. மொத்தம், 47.33 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.