அவினாசி பருத்தி ஏலம்; விலையில் முன்னேற்றம்
அவினாசி பருத்தி ஏலத்தில், தொடர்ந்து விலையேற்றம் தென்படுகிறது.
அவினாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நடந்தது. மொத்தம், 2,268 மூட்டையில், 66 டன் பருத்தி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. கடந்த வாரங்களை போன்றே, இந்த வாரமும் வியாபாரிகள் மத்தியில் கிராக்கி தென்பட்டது. இந்த வாரம், அதிகபட்சமாக, 13 வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர். 439 விவசாயிகள் பருத்தி எடுத்து வந்தனர்.
ஆர்.சி.எச்., ரகம் குவின்டாலுக்கு, 10 ஆயிரம் முதல், 11 ஆயிரத்து 400 ரூபாய், கொட்டு ரகம், 4,000 முதல், 5,500 ரூபாய் வரை விற்கப்பட்டது. 72.29 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.