மீண்டும் கொரோனா வார்டு! அவினாசியில் உஷார் நடவடிக்கை

அவினாசி மகாராஜா கல்லுாரியில், மீண்டும் கொரோனா வார்டு திறக்கப்பட்டது.;

Update: 2022-01-08 10:45 GMT

அவிநாசி மகாராஜா கல்லூரியில் கொரோனா வார்ர்டு பணிகளை பார்வையிட்ட சுகாதாரத்துறையினர்.

கொரோனா இரண்டாம் அலையின் போது, அவினாசி மற்றும் சுற்றுவட்டார மக்களுக்கு சிகிச்சை வழங்க, அவினாசி, மகாராஜா கல்லுாரியில், 150 படுக்கை வசதியுடன், கொரோனா சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டது. தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்கள், அந்த வார்டில் தங்கி சிகிச்சை பெற்று, குணமாகினர். தொற்று பாதிப்பு குறைந்த போது, கொரோனா சிறப்பு வார்டு மூடப்பட்டது.

மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக அரசு அறிவித்துள்ள நிலையில், மீண்டும் மகாராஜா கல்லுாரியில் கொரோனா வார்டு அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, சுகாதார துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News