அவினாசி அரசு அலுவலகங்களை 'மிரட்டும்' கொரோனா: அதிகரிக்கும் தொற்று

அவினாசியில் உள்ள அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு தொற்றுப்பரவல் ஏற்பட்டுள்ளது.;

Update: 2022-01-21 14:30 GMT

திருப்பூர் மாவட்டம், அவினாசியில் கொரோனா தொற்றுப்பரவல் அதிகரித்து வருகிறது. தாலுக்கா அலுவலக வளாகத்தில் உள்ள நில அளவை பிரிவில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவினாசி காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீஸ்காரர், தீயணைப்பு நிலையத்தில் பணிபுரியும் தீயணைப்பு வீரர் ஆகியோருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஏற்கனவே, யூனியன் வங்கியில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. எனவே, 'பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்' என, சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News