அவினாசியில் அனைத்து தொழிற்சங்கத்தினரின் ஆலோசனைக் கூட்டம்

அவினாசியில் அனைத்து தொழிற்சங்கத்தினரின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-01-29 13:00 GMT

ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தொழிற்சங்கத்தினர்.

திருப்பூர் மாவட்டம், அவினாசியில் அனைத்து தொழிற்சங்கத்தினரின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சிஐடியூ விசைத்தறி பிரிவு மாநில தலைவர் முத்துசாமி தலைமை வகித்தார்.

இதில் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறிகளுக்கு அறிவித்த கூலி உயர்வை அமல்படுத்த வேண்டும்; 2 லட்சம் விசைத்தறியாளர்களின் குடும்ப வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும்; கடந்த 8 ஆண்டாக, கூலி உயர்வு வழங்க மறுக்கும் ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டித்து நாளை முதல் மூன்று நாட்களுக்கு போராட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், மாவட்ட தொமுச பேரவை கவுன்சில் துணை தலைவர் ஆர்.ரங்கசாமி, மின்சார வாரிய தொமுச செயலாளர் சரவணன், சிஐடியு., பழனிசாமி, ஏஐடியூசி., விசைத்தறி பிரிவு செயலாளர் செல்வராஜ், பழனிச்சாமி, கோபால், எம்.எல்.எப்., நிர்வாகி பாண்டியராஜ், குமார், ஏடிபி., சார்பில் நடராஜ் , ஐஎன்டியூசி., நவநீதகண்ணன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News