அவிநாசி; அரசு கலைக்கல்லூரியில் அறிவுசார் சொத்துரிமைகள் குறித்த கருத்து பட்டறை

Tirupur News- அவிநாசி அரசு கலைக்கல்லூரியில் அறிவுசார் சொத்துரிமைகள் குறித்த கருத்து பட்டறை நேர்காணல் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2024-02-03 13:28 GMT

Tirupur News- அவிநாசி அரசுக் கலைக்கல்லூரியில் அறிவுசார் சொத்துரிமைகள் கருத்து பட்டறை நேர்காணல் நடந்தது. 

Tirupur News,Tirupur News Today- அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அறிவு சார் சொத்துரிமைகள் பற்றிய கருத்து பட்டறை நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற இவ்விழாவினை நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில்  ராஜசேகரன் (வழக்கறிஞர் மற்றும் நிர்வாக பங்குதாரர்) புத்தாக்க கண்டுப்பிடிப்புக்களுக்கான அறிவுசார் சொத்து உரிமைகள் (IPR), வடிவுமைப்பு (Design), வர்த்தக முத்திரை (Trade Mark), பதிப்புரிமை (copyright) மற்றும் புவியியல் குறியீடு (Geographical indication) போன்றவைகள் குறித்து விளக்கப் பேசினார். இக்கருத்துப்பட்டறையில் அதுசார்ந்த பல விஷயங்கள் கற்பிக்கப்பட்டது.

மேலும் மாணவர்கள் தொழில் முனைவோர் ஆவதற்காக வழிமுறைகளையும் அதற்கு அரசு வழங்கும் சலுகைகள் பற்றியும் விவரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற கல்லூரி மாணவர்கள் தங்களது சந்தேகங்கள் மற்றும் கருத்துக்களை தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வழிகாட்டி ஆசிரியர்கள், தமிழ்நாடு மாணவ மாணவிகளின் கண்டுபிடிப்பாளர்கள், வெற்றியாளர்கள், புத்தாக்கப்பற்று சீட்டு வெற்றியாளர்கள், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர்கள், கல்லூரி மாணவர்கள் அனைவரும் பங்கு பெற்றனர்.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஜோ.நளதம்  தலைமை வகித்தார். தொழில் முனைவோர் மேம்பாட்டு குழுத் தலைவர் செ பாலமுருகன் சர்வதேச வணிகவியல் துறை தலைவர் முன்னிலை வகித்தார். இதில் அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த சுமார் 100 மாணவர்கள் நேரலையில் பங்கு பெற்றனர்.

Tags:    

Similar News