திருமுருகன்பூண்டி நகராட்சியில் வார்டு வரையறை நிறைவு: கட்சியினரிடம் கருத்துக்கேட்பு
திருமுருகன்பூண்டி நகராட்சியின் 27 வார்டு உருவாக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சியினரிடம் ஆட்பேசனை பெறப்பட்டது.;
திருப்பூர் மாவட்டம், அவினாசி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட திருமுருகன்பூண்டி நகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வரையறை பணிகள் நடந்தன. தற்போதுள்ள 15 வார்டுகளை 27 வார்டுகளாக அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பூண்டி பகுதியில் உள்ளூர் அரசியல் கட்சியினரிடம் ஆட்பேசனை பெறும் கூட்டம் அலுவலக வளாகத்தில் நடந்தது. நகராட்சி கமிஷனர் முகமது சம்சுதீன், பிரிக்கப்பட்ட வார்டுகளை கூற, அரசியல் கட்சியினர் தங்களின் ஆட்சேபனைகளை கூறினர். தங்களின் சந்தேகங்களுக்கு விளக்கமும் பெற்றனர்.
இந்த வார்டு வரையறை பட்டியல் நகராட்சிகளின் மண்டல அளவில், வரும் 22ம் தேதி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் கூட்டத்தில் சமர்பிக்கப்பட உள்ளது.