நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட திருமுருகன்பூண்டிக்கு விரைவில் ஆணையர்
நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள திருமுருகன்பூண்டி பேரூராட்சிக்கு விரைவில் ஆணையர் நியமிக்கப்பட உள்ளார்.;
திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகேயுள்ள திருமுருகன்பூண்டி சிறப்பு நிலை பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்த மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ள நிலையில், அங்கு ஆணையர் பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கேற்ப, அங்கு செயல் அலுவலராக பணிபுரிந்து வந்த ஆனந்தன், அவினாசி சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு, பெறுப்பேற்றுக் கொண்டார்.