ஆசிரம குழந்தைகள் நலன் காக்க ஹோமம்
ஆசிரமத்தில் வசிக்கும் குழந்தைகள் நலன் காக்க, சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது.;
கருவலூர் சங்கராலயம் ஆஸ்ரமத்தில், குழந்தைகள் நலன் வேண்டி ஹோமம் நடத்தப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகேயுள்ள கருவலுார் சங்கராலயம் சேவாலயத்தில் சிறு பிள்ளைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களது நலன் வேண்டி, ஆண்டுதோறும், சிறப்பு ஹோமம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டும் ஹோமம் நடத்தப்பட்டது. சிவஸ்ரீ ராஜ்குமார் சிவாச்சாரியார் தலைமையில், தன்வந்திரி ஹோமம், கணபதி ஹோமம் மற்றும் மகாலட்சுமி ஹோமம் ஆகியவை நடத்தப்பட்டன.