அன்னுாரில் காவல்துறை சார்பில் சுழலும் 'மூன்றாவது கண்!'

அன்னுாரில், காவல்துறை சார்பில் அமைக்கப்பட்ட, கண்காணிப்பு கேமராக்களை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.;

Update: 2022-01-06 03:00 GMT

அவினாசி சட்டமன்றத் தொகுதி, அன்னுார் காவல் சரகத்துக்கு உட்பட்டு, ஒரு பேரூராட்சி, 19 ஊராட்சிகளில், 189 கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில், 500க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த 25 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

அன்னுார் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்கெனவே, 30 கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. இந்நிலையில் கரியாம்பாளையம், கணேசபுரம், குன்னத்துார், பசூர் உள்ளிட்ட பகுதிகளில் 70 கேமராக்கள் பொருத்தப்பட்டன.

நேற்று, கோவை ரூரல் காவல்துறை கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் 'சிசிடிவி' கேமராக்களின் இயக்கத்தை துவக்கி வைத்து பேசுகையில், "சிசி கேமராக்கள் குற்றங்களை கண்டு பிடிப்பதில் உதவிகரமாக உள்ளன. பொதுமக்கள் வீடுகளில் உள்நோக்கியும் வெளிப்புறமாகவும் 'சிசிடிவி' கேமராக்களை பொருத்த வேண்டும். 'சிசிடிவி' கேமராக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, குற்றச் செயல்களைக் கண்டறிவதும் அதிகரிக்கிறது. கோவை ருரல் போலீசில் அன்னுாரில்தான் அதிகபட்சமாக, 100 'சிசி' கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன" என்றார்.

கேமரா பொருத்த உதவிய ஜே.எஸ். ஆட்டோ காஸ்ட், பண்ணாரி அம்மன் சுகர்ஸ், வாசுதேவா மில் உள்ளிட்ட நிறுவனத்தினர், கவுரவிக்கப்பட்டனர். மேட்டுப்பாளையம் துணை கண்காணிப்பாளர் பாலமுருகன், இன்ஸ்பெக்டர் நித்யா மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News