அவிநாசியில், 21 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 பேர் கைது
அவினாசியில், 3 லட்சம் பெறுமானமுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக 5 பேரை கைது செய்தனர்.;
திருப்பூர் மாவட்டம், அவிநாசி பழைய பேருந்து நிலையம் அருகே, கஞ்சா கைமாற்றப்படுவதாக, அவிநாசி போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் நடத்திய ஆய்வில், டூவீலரில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில், 'டிராவல் பேக்' வைத்தபடி, மூன்று பேர் இருந்தனர். போலீசாரை கண்டதும், அவர்கள் தப்பித்து ஓட முயற்சித்தனர்.
போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். அதில் நாமக்கல் மாவட்டம், குமரபாளையத்தை சே்ரந்த முருகேசன், 44 என்பவர், 6 கிலோ கஞ்சாவை, 75 ஆயிரம் ரூபாய்க்கு, விற்பனை செய்ய வந்தாக தெரிய வந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முருகேசனின் சகோதரி சாந்தி, 54, வெங்கடாசலம், 38, சரவணன், 22, கோவை மாவட்டம்,
கருமத்தம்பட்டியை சேர்ந்த சரவணன், 22, அச்சு (எ) சுரேஷ், 32 ஆகியோரைம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். அவர்கள் ஆந்திராவில் இருந்து, அவற்றை வாங்கி வருவதாக, போலீசார் தெரிவித்தனர். அவர்கள் ஐந்து பேரையும் கைது செய்து, தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.