அவினாசியில் மாநில அளவில் இறகு பந்து போட்டியில் பங்கேற்க அழைப்பு
அவினாசியில், மாநில அளவிலான இரட்டையர் இறகு பந்து போட்டி நடத்தப்பட உள்ளது.
திருப்பூர் மாவட்டம், அவினாசி, சையத் பேட்மின்டன் அகாடமி மற்றும் பன் அண்ட் பரோலிக் அகாடமி இணைந்து, மாநில அளவிலான இரட்டையர் இறகு பந்து போட்டிகளை நடத்த உள்ளன. வரும், 14ம் தேதி, காலை, 8:00 மணிக்கு, 'பன் அண்டு பரோலிக்' உள்விளையாட்டு அரங்கில், இப்போட்டி தொடங்குகிறது.
இதில் வெற்றி பெறுபவர்களுக்கு, ரொக்கப்பரிசு வழங்கப்பட உள்ளது. போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள், 9894933662 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.