அவினாசி அரசு கல்லூரியில் அமைப்பு தின விழா
அவினாசி அரசு கலைக்கல்லுாரியில், மாணவர் சங்க அமைப்பு தின விழா நடந்தது.;
திருப்பூர் மாவட்டம், அவினாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், இந்திய மாணவர் சங்கத்தின், 52வது அமைப்பு தின விழா கொண்டாடப்பட்டது. மாணவர் சங்க நிர்வாகிகள் கேக் வெட்டி, பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதில், 'நீட்' தேர்வை ரத்து செய்ய வேண்டும் என, வலியுறுத்தினர்.
இதற்கான ஏற்பாடுகளை, மாணவர் சங்க மாவட்ட துணை செயலாளர் மணிகண்டன், மாணவர் குழு உறுப்பினர் சஞ்சய், ஆகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.