அவிநாசி: சேவூர் லுார்து அன்னை தேவாலய திருவிழா காெடியேற்றத்துடன் துவக்கம்
சேவூர் லுார்துபுரத்தில் உள்ள லுார்து அன்னை திருத்தலத்தில் ஆண்டு விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.;
அவிநாசி சேவூர் அருகேயுள்ள, லுார்துபுரத்தில் அமைந்துள்ள, லுார்து அன்னை திருத்தல திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை, 8:30 மணிக்கு, ஜெபமாலை, திருப்பலி, வேண்டுதல் தேர்பவனியுடன் கொடியேற்றம் நடந்தது. கோவை மறை மாவட்ட பொருளாளர் அருட்பணி. பிரான்சிஸ், தலைமை வகித்தார்.
வரும், 15ம் தேதி, மாலை, 6:30 மணிக்கு, கோவை மறைமாவட்ட முதன்மை குரு ஜான்ஜோசப் ஸ்தனிஸ் தலைமையில், ஜெபமாலை, திருப்பலி, வேண்டுதல் தேர்பவனி நடக்கிறது. 16ம் தேதி, காலை, 8:00 மணிக்கு, கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில், ஆடம்பர கூட்டுப்பாடல் திருப்பலி, உறுதிபூசுதல் மற்றும் வேண்டுதல் தேர்பவனி நடத்தப்பட உள்ளது. காலை, 11:00 மணிக்கு திருப்பலி நடக்கிறது.மாலை, 6:00 மணிக்கு வேண்டுதல் தேர் பவனி நடத்தப்பட இருக்கிறது.
விழா ஏற்பாடுகளை, பங்குகுருக்கள் விக்டர் சந்தியாகு, சிஜூ மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர். அரசின் கொரோனா தடுப்பு விதிமுறைக்கு உட்பட்டு விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு தேவாலய நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.