அவினாசி பேரூராட்சி தலைவர் பதவி பெண்களுக்கே வாய்ப்பு

தலைவர் பதவிக்கான இட ஒதுக்கீட்டில், அவினாசி பேரூராட்சி பெண்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-01-18 02:30 GMT

நடத்தப்பட உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், தலைவர் பதவிக்கான இட ஒதுக்கீட்டில், அவினாசி பேரூராட்சி பெண்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ளது.

'நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தயாராக உள்ள நிலையில், கொரோனா தொற்றுப்பரவால், தேர்தல் அறிவிப்பில் தாமதம் ஏற்படுகிறது' என கூறப்படுகிறது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கான இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திருப்பூர் மாவட்டம், அவினாசி பேரூராட்சியில் தலைவர் பதவி, பெண்கள் பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அரசியல் கட்சிகளின் முன்னாள் பெண் தலைவர்கள் பலரும், புதியவர்கள் சிலரும் தலைவர் பதவியை குறி வைத்துள்ளனர்

Tags:    

Similar News