அவினாசி திமுகவில் உட்கட்சி பூசல்- தொண்டர்கள் கவலை

அவினாசி தி.மு.க.வில் நிலவும் உச்சகட்ட கோஷ்டி பூசல், அக்கட்சியினரை கவலையடை செய்துள்ளது.

Update: 2022-02-12 06:00 GMT

அவினாசி பேரூராட்சியில் உள்ள, 18 வார்டுகளில் தி.மு.க. கூட்டணி சார்பில், தி.மு.க. 13 வார்டுகளில் போட்டியிடுகிறது. இதில், ஒரு வார்டில், கொ.மு.தே.க., உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது 4 வார்டுகள் காங்கிரஸ் கட்சிக்கும், ஒரு வார்டு மா.கம்யூ., கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டணியில் உள்ள இ.கம்யூ., கட்சிக்கு, வார்டு ஒதுக்கீடு செய்வதில் உடன்பாடு எட்டப்படாததால், அக்கட்சி, 2 வார்டுகளில் போட்டியிடுகிறது.

இதில், கூட்டணி கட்சியினர் போட்டியிடும், 9 வார்டுகளில், சீட் கிடைக்காமல் அதிருப்தியில் உள்ள தி.மு.க.,வினர் போட்டியிடுகின்றனர். சில போட்டி வேட்பாளர்களும் களம் இறங்கியுள்ளனர். கூட்டணி கட்சிகளுக்குள் ஒருங்கிணைப்பு இல்லை. இதுபோன்ற காரணங்களால், ஓட்டுகள் சிதறும் என, அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இது, அ.தி.மு.க.வுக்கு சாதகமாகிவிடும் எனவும் அவர்கள் அஞ்சுகின்றனர். எனவே, கட்சித்தலைமை இவ்விவகாரத்தில் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கட்சி தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர். 

Tags:    

Similar News