அத்திக்கடவு-அவிநாசி திட்டம் மிக விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்; கொமதேக ஈஸ்வரன் உறுதி

Tirupur News- அத்திக்கடவு-அவிநாசி திட்டம் மிக விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் பேசினார்.

Update: 2023-12-18 08:43 GMT

Tirupur News-கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- அத்திக்கடவு-அவிநாசி திட்டம் மிக விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது என கொமதேக மாநில பொதுச்செயலாளர்  ஈஸ்வரன் இன்று தெரிவித்தார்.

கொமதேக திருப்பூர் வடக்கு மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் அவிநாசியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பசுமை எஸ்.சுகுமார் தலைமை வகித்தார். மாநிலசெயற்குழு உறுப்பினர்கள் சுதர்சன் கந்தசாமி, மெடிக்கல் மூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் கணேசன், ராயப்பன், ஸ்ரீதர், மாவட்ட இளைஞரணி சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் ஈஸ்வரன் பேசியதாவது:

கடந்த ஆண்டு, விசைத்தறிக் கூடங்களுக்கு மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து விசைத்தறியாளர்கள் 8 மாதங்களாக மின் கட்டணம் செலுத்தாமல் போராடி வந்த நிலையில் மின் கட்டண உயர்வு ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் 8 மாதங்களாக மின் கட்டணம் செலுத்தாதற்காக அபராதம் விதிக்கப்பட்டது.

இந்நிலையில், மின் கட்டண அபராதம் நீக்குவதற்கான அரசாரணை ஒரு வாரத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. அதே வேளையில், அத்திக்கடவு-அவிநாசி திட்டம் மிக விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

விவசாயிகளுக்கான குறை தீர்ப்பு முகாம், மாவட்ட ஆட்சியர் தலைமையிலும், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலும் முறையாக நடத்தி குறைகளைத் தீர்க்க வேண்டும்.

பிப்ரவரி 4ம் தேதி பெருந்துறையில் நடைபெறும் கொங்கு மண்டல எழுச்சி மாநாட்டில் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என்றும் அவர்  கேட்டுக்கொண்டார்.

Tags:    

Similar News