வீட்டுமனைப் பட்டா கேட்டு குடிசை அமைத்து மக்கள் போராட்டம்

வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி நான்கு நாட்களாக குடிசை அமைத்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்

Update: 2021-11-21 06:30 GMT

வீட்டுமனைபட்டா கேட்டு, குடிசை அமைத்து போராடி வரும் மக்கள்.

அவிநாசி அருகே வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி  நான்கு நாட்களாக குடிசை அமைத்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், அவினாசி ஊராட்சி ஒன்றியம், தெக்கலுார், காமநாயக்கன்பாளையம் பகுதியில், 100க்கும் மேற்பட்ட ஆதி திராவிடர் மக்கள் வசிக்கும் காலனி உள்ளது. வீடுகளில், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதால், அருகேயுள்ள கருவேலங்குட்டை பகுதியில், வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என, தெக்கலுார் ஊராட்சி நிர்வாகத்திடம் மனு வழங்கியிருந்தனர்.

ஆனால், தெக்கலுார் ஊராட்சி நிர்வாகம், மாவட்ட ஆட்சியரின் உத்தரவு அடிப்படையில், அடர்வனம் அமைக்கும் திட்டத்தில், அங்கு மரக்கன்று நடும் பணியை துவக்கியுள்ளது. இதை கண்டித்து, காமநாயக்கன்பாளையம் மக்கள், கருவேலங்குட்டையில், குடிசை அமைத்து தங்கியுள்ளனர். அவர்களுக்கு மாற்றிடத்தில், பட்டா வழங்க ஏற்பாடு செய்து தருவதாக கூறி, அதிகாரிகள், சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News