கூலி உயர்வு கேட்டு கருப்புக்கொடி ஏற்றிவிசைத்தறி தொழிலாளர்கள் போராட்டம்

கூலி உயர்வு வழங்காத ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டித்து, விசைத்தறிக்கூடங்களில் கறுப்புக்கொடி கட்டி போராட்டம் நடத்தப்பட்டது.

Update: 2022-02-02 14:15 GMT

திருப்பூர் மாவட்டம் தெக்கலூர் பகுதியில் குதிரைமேல் கறுப்புக்கொடியை ஏந்தியவாறு  போராட்டத்தில் ஈடுபட்ட விசைத்தறி தொழிலாளர்கள்

கூலி உயர்வு வழங்காத ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டித்து, விசைத்தறிக்கூடங்களில் கறுப்புக்கொடி கட்டி போராட்டம் நடத்தப்பட்டது.

திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் மூன்று லட்சம் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. நேரடி, மறைமுகமாக, 5 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். கடந்த, 2014ம் ஆண்டிற்கு பின், 7 ஆண்டுகளாக விசைத்தறிகளுக்கான கூலி உயர்வு முழுமையாக வழங்கப்படாததை கண்டித்து, கடந்த, 9ம் தேதி முதல் திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர்.திருப்பூர் மாவட்டம் அவினாசி, தெக்கலுார் மற்றும் புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் கறுப்புக்கொடி கட்டும் போராட்டம் நடத்தினர். தெக்கலூர் பகுதியில் குதிரைமேல் கறுப்புக்கொடியை ஏந்தியவாறு வந்து, ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டித்து  முழக்கமிட்டனர்.

Tags:    

Similar News