அன்னுார் பேரூராட்சி தலைவர் தேர்வு

அன்னுார் பேரூராட்சி தலைவராக தி.மு.க., கவுன்சிலர் பரமேஸ்வரன், தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Update: 2022-03-26 05:00 GMT

அன்னுார் பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன்.

அவினாசி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, அன்னுார் பேரூராட்சி தலைவர் தேர்தல் கடந்த 4ம் தேதி நடந்த போது தகராறு ஏற்பட்டு, ஓட்டுச்சீட்டுக்கள் கிழிக்கப்பட்டன. இதையடுத்து தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு, நேற்று நடத்தப்பட்டது. நேற்று காலை நடந்த தலைவர் தேர்தலில், தி.மு.க., உறுப்பினரும், நகர பொறுப்பாளருமான பரமேஸ்வரன், போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த முறை நடந்தது போல் தகராறு நடைபெறாமல் இருக்க, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags:    

Similar News