துலுக்கமுத்துாரில் அங்கன்வாடி மையம் கட்டுமானப்பணி துவக்கம்

அவினாசி அருகே துலுக்கமுத்துாரில், அங்கன்வாடி மைய கட்டட கட்டுமானப் பணிக்கு பூமி பூஜை போடப்பட்டது.;

Update: 2021-12-30 11:30 GMT

துலுக்கமுத்துாரில், அங்கன்வாடி மைய கட்டட கட்டுமானப் பணிக்கு பூமி பூஜை போடப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், அவினாசி ஊராட்சி ஒன்றியம், துலுக்கமுத்துார் ஊராட்சி, சாலையபாளையத்தில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், 10.60 லட்சம் ரூபாய் செலவில், அங்கன்வாடி மைய கட்டடம் கட்ட பூமி பூஜை போடப்பட்டது.

ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஜெகதீசன், தலைமை வகித்து, துவக்கி வைத்தார். துலுக்கமுத்துார் ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரி, ஒன்றிய கவுன்சிலர் அய்யாவு, வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News