மது விற்பனை செய்த அதிமுக பிரமுகர் கைது!
அவிநாசி அருகே கள்ளச்சந்தையில் மதுவிற்ற அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டார்.;
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. ஆனால் கள்ளச்சந்தையில் மது விற்பனை நடந்து கொண்டிருக்கிறது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள வேட்டுவபாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர், அவிநாசி மேற்கு ஒன்றிய அதிமுக அண்ணா தொழிற்சங்க செயலாளராக உள்ளார்.மேலும், வேட்டுவபாளையம் பஞ்சாயத்து 5வது வார்டு உறுப்பினராக உள்ளார்.
இவர் சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மது விற்பனை செய்த செந்தில்குமாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 13பாட்டில்கள் மற்றும்ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்தனர்.