பைக் மீது கார் மோதியது; கல்லுாரி மாணவர் பலி

Car Bike Accident -அவிநாசி அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில், பொறியியல் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.;

Update: 2022-09-08 02:21 GMT

அவிநாசி அருகே நடந்த விபத்தில், பொறியியல் கல்லூரி மாணவர் உயிரிழந்தார். 

Car Bike Accident -திருப்பூர் கணபதிபாளையத்தை சேர்ந்த சோமசுந்தரம் மகன் சந்தீப் குமார் (வயது 21). திருப்பூர் 15 வேலம்பாளையம் சொர்ணபுரி அவென்யூ வை சேர்ந்த சங்கரசுப்பிரமணியின் மகன் சக்தி சரன் (21). இவர்கள் இருவரும் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ. இறுதியாண்டு மாணவர்கள்.

நேற்று இவர்கள் இருவரும் பைக்கில், திருப்பூரிலிருந்து கோவை நோக்கி சென்றனர். பைக்கை சக்தி சரன் ஓட்டினார். பின்சீட்டில் சந்தீப் குமார் இருந்தார். இவர்களது பைக், அவிநாசியை அடுத்த தெக்கலூர் பகுதியில் சென்றது. அப்போது அதே திசையில், அதிவேகமாக வந்த கார், இவர்களின் பைக் பின்பகுதியில் பயங்கரமாக மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு, படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த சந்தீப் குமார் அதே இடத்தில் உயிரிழந்தார்.  படுகாயமடைந்த சக்தி சரன்,  திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விபத்து குறித்து, அவிநாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News