அவினாசி சட்டசபையில் புதிய வாக்காளர்களாக இணைய 3,775 பேர் ஆர்வம்

அவினாசி சட்டசபை தொகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமில் 3,775 பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் இணைய விண்ணப்பம் வழங்கியுள்ளனர்.;

Update: 2021-11-30 07:30 GMT

அவினாசியில் தடுப்பூசி முகாம் நடந்தது.

அவினாசி சட்டசபை தொகுதியில், வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமில், 3,775 பேர் புதிதாக, வாக்காளர் பட்டியலில் இணைய விண்ணப்பம் வழங்கியுள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. அவிநாசி சட்டசபை தொகுதியில் உள்ள, 313 ஓட்டு சாவடிகளில், கடந்த, 13,14, 20, 21 மற்றும், 27,28 என, ஆறு நாட்கள் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. மொத்தம், 6,998 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில், 3,775 பேர், புதிய வாக்காளர்களாக தங்களை இணைத்துக் கொள்ள விண்ணப்பம் வழங்கியுள்ளனர். 'விண்ணப்பங்களை பரிசீலித்து, அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்வதற்கான பணி மேற்கொள்ளப்படும்' என, தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News