மின்மாற்றியில் ஏறி இளைஞர் தற்கொலை

திருப்பூர் அருகே வடமாநில இளைஞர் மின்மாற்றியில் ஏறி தற்கொலை - குடிபோதையில் நிகழந்த சோகம் !!;

Update: 2021-01-25 15:45 GMT

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த லட்சுமன் சிங் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவை மாவட்டம் வந்தார். பல்வேறு நிறுவனங்களில் பணிக்கு சேர்ந்துள்ளார், குடிக்கு அடிமையான லட்சுமன்சிங்கை அந்நிறுவனங்கள் வேலையில் இருந்து பாதியிலேயே நிறுத்தி உள்ளதால் இறுதியாக சூலூர் பகுதியில் உள்ள அடை தயாரிக்கும் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். அந் நிறுவனத்திற்க்கும் சரியாக வேலைக்கு செல்லாமல் குடித்து வந்ததால், அந்த நிறுவனமும் லட்சுமண் சிங்கை வேலையைவிட்டு நிறுத்தியது. இதனால் மனமுடைந்தவர் இன்று மது அருந்திவிட்டு கோவையிலிருந்து - திருப்பூர் மாவட்டம் அவிநாசி வந்தவர், அப்பகுதியில் உள்ள மின்மாற்றியில் ஏறி மின் கம்பியை பிடித்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் லட்சுமன் சிங்கின் உடலை மீட்டு அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு சம்பவம் குறித்து வழக்கு பதிவு.செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News