இன்று ஆடி கிருத்திகை; முருகன் கோவில்களில் திரண்ட பக்தர் கூட்டம்

Tirupur News,Tirupur News Today- ஆடிமாத கிருத்திகை தினமான இன்று, திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருக பெருமான் கோவில்களில், பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.;

Update: 2023-08-09 11:20 GMT

Tirupur News,Tirupur News Today- ஆடி கிருத்திகை தினமான இன்று, முருகன் கோவில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 

Tirupur News,Tirupur News Today- ஆடிமாத கிருத்திகை முருகனுக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. இதையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

காங்கயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில், கொங்கணகிரி கந்த பெருமான் கோவில், வாலிபாளையம் கல்யாண சுப்ரமணிய சுவாமி கோவில், மங்கலம் அருகே உள்ள முருகன் மலைக்கோவில், ஊத்துக்குளி கயித்தமலை கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில், அலகுமலை பால குமாரசாமி கோவில்,  அவிநாசி, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

ஆறுமுக பெருமானுக்கு பன்னீர், தேன், தினை மாவு, பஞ்சாமிர்தம் என பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் முருகன், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முருகனுக்கு பால் காவடி, பன்னீர் காவடி, பூ காவடி, மயில் காவடி என பக்தர்கள் எடுத்து வந்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். முடி காணிக்கை செலுத்தியும் நேர்த்தி கடனை முடித்தனர். மயில் வாகனத்தில் சுவாமி திருவீதியுலாவும் நடைபெற்றது. 

திருப்பூர் மட்டுமின்றி அருகில் உள்ள மாவட்டங்களில் உள்ள முருகன் கோவில்களுக்கும், பக்தர்கள் தங்கள் குடும்பங்களுடன் சென்றனர். ஈரோட்டில் உள்ள சென்னிமலை முருகன் கோவில், கோவையில் உள்ள மருதமலை முருகன் கோவில், திண்டுக்கல் மாவட்டம், பழனியில் உள்ள பால தண்டாயுதபாணி கோவில் என, பல்வேறு முருகன் கோவில்களில், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து, இறைவனை வழிபட்டனர்.

ஆடி கிருத்திகை தினமான இன்று, முருகன் கோவில்களில் பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், புளியோதரை, தயிர் சாதம், தக்காளி சாதம், லெமன் சாதம், கேசரி, சுண்டல் உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்பட்டன. கோவில்களில், அதிக கூட்டமாக இருந்ததால், பலரும் சிறப்பு கட்டண தரிசன வழியில் சென்று, சுவாமியை வழிபட்டனர். 

Tags:    

Similar News