திருப்பூர் மாவட்டத்தில் நாளை, நாளை மறுதினம் மின்தடை பகுதிகள் அறிவிப்பு

Tirupur News- திருப்பூர் மாவட்டத்தில் நாளை (22ம் தேதி), நாளை மறுதினம் (23ம் தேதி) மின்தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2024-01-21 01:31 GMT

Tirupur News- உடுமலை பூளவாடியில் நாளையும், திருப்பூரில் நாளை மறுதினமும் மின்தடை அறிவிப்பு (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டத்தில் நாளை (22ம் தேதி) மற்றும் நாளை மறுதினம் ( 23ம் தேதி) மின்தடை பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

உடுமலையை அடுத்துள்ள பூளவாடி துணை மின் நிலையத்தில் நடக்க உள்ள பராமரிப்புப் பணி கள்காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை, திங்கள்கிழமை (ஜனவரி 22) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளதாக மின் வாரிய செயற்பொறியாளா் மூா்த்தி அறிவித்துள்ளாா்.

பூளவாடி துணை மின் நிலையம்

மின்தடை ஏற்படும் பகுதிகள்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை

பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, கள்ளிப்பாளையம், பெரியபட்டி, கள்ளப்பாளையம், குப்பம்பாளையம், ஆ.அம்மாபட்டி, தொட்டியன் துறை, மானூா்பாளையம், பெரிய குமாரபாளையம், முண்டுவேலாம்பட்டி, வடுகபாளையம், பொட்டிக்காம்பாளையம், ஆத்துக்கிணத்துப்பட்டி, ஆமந்தகடவு, சிக்கனூத்து, கொள்ளுப்பாளையம், லிங்கமநாயக்கன்புதூா், சுங்காரமுடக்கு, முத்துசமுத்திரம், குடிமங்கலம்.

திருப்பூரை அடுத்துள்ள முதலிபாளையம், பலவஞ்சிபாளையம், நல்லூர் பகுதிகளில் நாளை மறுதினம் ஜனவரி 23-ல் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

 முதலிபாளையம், நல்லூா், பலவஞ்சிபாளையம் ஆகிய துணை மின்நிலையங்களில் நடக்க உள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை (23 ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் ராமசந்திரன் தெரிவித்துள்ளாா்.

முதலிபாளையம் துணை மின்நிலையம்

மின்தடை ஏற்படும் பகுதிகள்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை

சிட்கோ, பொன்னாபுரம், முதலிபாளையம், ராக்கியாபளையம், நலலூா், மண்ணரை, பாரப்பாளையம், கோல்டன் நகா், ஆா்.வி.இ.நகா், கூலிப்பாளையம், காசிபாளையம், சா்க்காா் பெரியபாளையம், பெட்டிக்கடை, சென்னிமலைப்பாளையம், ரங்கேவுண்டன்பாளையம், விஜயாபுரம், மானூா், செவந்தாம்பாளையம்,

நல்லூா் துணை மின்நிலையம்

மின்தடை ஏற்படும் பகுதிகள்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை

நல்லூா், காளிபாளையம், சாணாா்பாளையம், முத்தனம்பாளையம், ராக்கியாபாளையம் பிரிவு,

பலவஞ்சிபாளையம் துணை மின்நிலையம்

மின்தடை ஏற்படும் பகுதிகள்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை

செட்டிபாளையம், பலவஞ்சிபாளையம், பூங்கா நகா், பாலாஜி நகா், ஐயப்பா நகா் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News