அனைத்து பஸ்களையும் இயக்க வேண்டும்; போக்குவரத்து துறை உத்தரவு

Tamil Nadu Government Bus -கொரோனா தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்து விட்டதால், அரசு போக்குவரத்து கழக கிளைகளில் 'நாட் ரன்' எனப்படும் ஓடாத பஸ்கள் இனி நிறுத்தி இருக்க கூடாது; அனைத்து பஸ்களும் இயக்கத்துக்கு வர வேண்டும், என போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.;

Update: 2022-08-18 02:05 GMT

அரசு பஸ்கள் அனைத்தும் இயக்கப்பட வேண்டும் என, போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

Tamil Nadu Government Bus -அனைத்து கிளை, உதவி மேலாளருக்கு, போக்குவரத்து மேலாளர் அனுப்பிய சுற்றறிக்கை:

கொரோனா பெருந்தொற்று காரணமாக அரசின் வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு, பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. இயக்கப்பட்ட பஸ்களிலும் பயண நடைகளும் குறைக்கப்பட்டது. தற்போது, கொரோனா பெருந்தொற்று வெகுவாக குறைந்துள்ள நிலையில், அனைத்து கட்டுப்பாடுகளும் விலக்கி கொள்ளப்பட்டுள்ளது; இயல்பு வாழ்க்கையும் திரும்பியுள்ளது.

பொது போக்குவரத்து தேவையை பயணிகள் விரும்பும் நேரத்தில், பணிமனைகளில் இருந்து பஸ்கள் முழுமையாக இயக்காமல் 'நாட் ரன்' என ஓரங்கட்டி நிறுத்துவதாக மக்களிடம் இருந்து, புகார்கள் வருவது அதிகரித்து வருகிறது.எனவே, அனைத்து ஓட்டுனர், நடத்துனர் தங்களது பணி ஒதுக்கீட்டின்படி, பஸ்களை குறித்த நேரத்தில் நடை இழப்பில்லாமல் இயக்கிட வேண்டும். இரவு கடைசி பஸ்கள், இரவில் வேறு இடங்களில் நிறுத்தி, அதிகாலையில் புறப்படும் பஸ்களை முழுமையாக இயக்க வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News