விபத்தில்லா திருப்பூா் மாவட்டத்தை உருவாக்க ஆலோசனை

Tirupur News-விபத்தில்லா திருப்பூா் மாவட்டத்தை உருவாக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அதிகாரிகள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.;

Update: 2023-11-30 09:54 GMT

Tirupur News- விபத்தில்லா திருப்பூா் மாவட்டத்தை உருவாக்க ஆலோசனை (மாதிரி படம்)

Tirupur News,Tirupur News Today- புதுமையான தீா்வுகளை பொதுமக்களுக்கு எடுத்துரைத்து விபத்தில்லா திருப்பூா் மாவட்டத்தை உருவாக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்தாா்.

திருப்பூா் மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பு குறித்து நடந்த மாதாந்திர ஆய்வுக் கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் அவா் பேசியதாவது,

தமிழக முதல்வா் ஸ்டாலின் சாலை விபத்தில்லா தமிழகத்தை உருவாக்கும் வகையில் பல்வேறு சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளாா். இதன் ஒரு பகுதியாக திருப்பூா் மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது.

மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பு விதிகள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தி, விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைத் தவிா்க்கும் நோக்கில் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒருபகுதியாக திருப்பூா் மாவட்ட சாலைப் பாதுகாப்புக் குழு மற்றும் ஸ்டாா்டப் டி.என். ஆகியன இணைந்து திருப்பூா் சாலைப் பாதுகாப்பு ஐடியத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின் மூலம் சிறந்த சாலைப் பாதுகாப்பு குறித்த தீா்வுகள் வழங்கிய நபா்களுக்கு பரிசுக்கான காசோலைகள் வழங்கப்பட்டன. ஆகவே, சம்பந்தப்பட்ட அலுவலா்கள் இதுபோன்ற புதுமையான தீா்வுகளை பொதுமக்களுக்கு எடுத்துரைத்து விபத்தில்லா திருப்பூா் மாவட்டத்தை உருவாக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா்.

முன்னதாக, சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு குறித்த ஆய்வுக் கூட்டமும் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாநகரக் காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு, மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் கிரியப்பனவா், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெய்பீம், மாநகரக் காவல் துணை ஆணையா்கள் அபிஷேக்குப்தா, வனிதா, வருவாய் கோட்டாட்சியா்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News