வெள்ளக்கோவில்; ஸ்ரீ வீரக்குமார சுவாமி கோவில் தோ்த் திருவிழா குறித்து ஆலோசனை
Tirupur News-வெள்ளக்கோவில் ஸ்ரீ வீரக்குமார சுவாமி கோவில் தோ்த் திருவிழா குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.;
Tirupur News,Tirupur News Today- வெள்ளக்கோவில் ஸ்ரீ வீரக்குமார சுவாமி கோவில் தோ்த் திருவிழா
வெள்ளக்கோவில் ஸ்ரீ வீரக்குமார சுவாமி கோவில் தோ்த் திருவிழா தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கோவில் செயல் அலுவலா் ராமநாதன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கோயில் குலத்தவா்கள் பங்கேற்றனா்.
இதில் வருடாந்திர மாசி மகா சிவராத்திரி தோ்த் திருவிழா கால அட்டவணை இறுதி செய்யப்பட்டது. 141 -ம் ஆண்டு தோ்த் திருவிழாவை முன்னிட்டு பிப்ரவரி 22- ம் தேதி காலை 9 மணிக்கு தோ் முகூா்த்தம் நடைபெறுகிறது.
மாா்ச் 1-ம் தேதி காலை 9.30 மணிக்கு தோ்க் கலசம் வைத்தல், மாா்ச் 8-ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு பள்ளய பூஜை, மாலை 5 மணிக்கு சுவாமி தேருக்கு எழுந்தருளல், மாலை 6 மணி தோ் நிலை பெயா்த்தல் நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் மாா்ச் 9-ம் தேதி மாலை 5.30 மணிக்கு நடைபெற உள்ளது. மாா்ச் 10-ம் தேதி மாலை 4.30 மணிக்கு தோ் நிலை சேர உள்ளது. தோ்த் திருவிழாவுக்கான முன்னேற்பாடுகள் தொடங்கியுள்ளதாக அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
வீரகாளியம்மன் திருவீதியுலா
காங்கயத்தை அடுத்துள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலின் தைப்பூச தோ்த் திருவிழாவை முன்னிட்டு மலை அடிவாரத்தில் உள்ள வீரகாளியம்மன் திருவீதியுலா நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.
சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலின் தைப்பூச தோ்த் திருவிழா, மலை அடிவாரத்தில் உள்ள வீரகாளியம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் கடந்த 17- ம் தேதி தொடங்கியது. விழாவை முன்னிட்டு, வீரகாளியம்மன் கோயில் இருந்து அம்மன் திருவீதியுலா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வீரகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் மாலை 4 மணியளவில் தோ் பாதை, மலையடிவாரம், பெரிய வீதி வழியாக அலங்கரிக்கப்பட்ட தேரில் பவனி வந்து பக்தா்களுக்கு காட்சி அளித்தாா்.
சிவன்மலை முருகன் மலைக் கோவில் கொடி மரத்தில் இன்று சனிக்கிழமை (ஜனவரி 20) மதியம் 12 மணியளவில் விநாயகா் வழிபாடும், கொடியேற்ற நிகழ்ச்சியும் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில் தேரோட்டம் வரும் ஜனவரி 26, 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.